களுதாவளை கிராமத்தில் விஷேட பொருளாதார மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபம்

க.விஜயரெத்தினம்)
களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுதாவளை கிராமத்தில் பொருளாதார அபிவிருத்தி  அமைச்சின் முந்நூறு மில்லியன் ரூபா நிதியொதூக்கீட்டில் மூலம் “விஷேட பொருளாதார மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபம் இன்று(22.7.2017)  சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் முன்னாள் பிரதியமைச்சர் சோ.கணேசமூர்த்தி தலைமையில் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது..

முன்னாள் பிரதியமைச்சரும்,வர்த்தக வாணிபத்துறை அமைச்சின்  விஷேட ஆலோசகரும்,ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி அவர்களின் அழைப்பின் பேரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன் அவர்கள் பிரதமஅதிதியாகவும்,விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.அமீரலி,மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஞானமுத்து ஸ்ரீநேசன்,சீ.யோகேஸ்வரன்,மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம்,இந்திரகுமார் பிரசன்னா,ஞானமுத்து கிருஸ்ணப்பிள்ளை(வெள்ளிமலை),கோவிந்தன் கருணாகரம் (ஜனா) ,பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரேணுகா எக்க நாயக்க, மாவட்ட செயலாளர் பீ.எஸ்.எம் சார்ள்ஸ்,அரச உயர்அதிகாரிகள் ,பிரதேச செயலாளர்கள்,பொதுமக்கள்  கலந்து கொண்டார்கள்.இதன்போது அதிதிகளால் பொருளாதார மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.