அகில உலக ராமகிருஷ்ணமிசனின் உதவித் தலைவர் மட்டக்களப்பு விஜயம்

எஸ். பாக்கியநாதன்
மக்களின் துன்பத்தைப் போக்குவதற்காக இறைவன் குருவடிவாக வந்து காட்சியளிக்கின்றார். மக்கள் குறிக்கோள் மற்றும் லட்சியம் இல்லாமல் வாழும்போது இறைவனிடம் நாம் நெருங்கும்போது அவர் சரியான இடத்தைக் காட்டுகின்றார்;. நாம் இறைவன்மீது அளவுகடந்த அன்னைக் காட்டுவதால் அவர் எம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்குகின்றார் என கல்லடி இராமகிருஷ்ணமிசன் தலைவர் சுவாமி பிரபு பிரேமானந்தஜீ தெரிவித்தார்..

அகில உலக இராமகிருஷ;ண மடம் மற்றும் ராமகிருஷ;ணமிசனின் உதவித் தலைவரும், சென்னை இராமகிருஷ்ண மடத்தின் தலைவருமான ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தாஜீ மகராஜ் மட்டக்களப்பிற்கு வருகைதரவுள்ளதை பத்திரிகையாளர்கள் மற்றும் பக்தர்களுக்கு அறிவிக்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை (21) கல்லடி இராமகிருஷ;ணமிசனில் நடைபெற்றபோதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கல்லடி இராமகிருஷ;ணமிசன் சுவாமி ஸ்ரீவாசானந்தா மற்றும் வைத்தியக்கலாநிதி ரி. சுந்தரேசன் ஆகியோரும் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.
சென்னையிலிருந்து இன்று (23) மாலை கொழும்பு இராமகிருஷ்ணமிசன் வந்து சேரும் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தாஜீ மகராஜ் செவ்வாய்க்கிழமை (25) காலை 11.30 மணிக்கு மட்டக்களப்பு வாவியில் நீர்ப் பிளேன் மூலம் வருகை தரவுள்ளார். அங்கிருந்து பிரதான வீதி வழியாக கல்லடி மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் இருந்து பக்தர்களாலும் கல்லடி சிவானந்தா வித்தியாலய மாணவர்கள் மற்றும் விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவிகளாலும் சுவாமியை வரவேற்பர்.
புதன்கிழமை (26) காலை 6.30 மணிக்கு மந்திர உபதேசம் (தீட்சை) பதிவு செய்யப்பட்ட பக்தர்களுக்கு வழங்கப்படும். மாலை 4.30 மணிக்கு கல்லடி சுவாமி விபுலானந்தர் மணிமண்டபத்தில் சுவாமியின் ஆசியுரை இடம்பெற்று மாலை 6.30 மணிவரை பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கி வைப்பார்.
வியாழக்கிழமை (27) மாலை 4.30 மணிக்கு காரைதீவு இராமகிருஷ்ணமிசனில் பக்தர்களுக்கு அருள் வழங்கவுள்ளார்.
வெள்ளிக்கிழமை (28) கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்திற்கும், திங்கள் (31) இரம்போடைக்கும், செவ்வாய்க்கிழமை (01) நுவரெலியா மற்றும் கண்டிக்கும் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.