அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா

எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை மஹோற்சவத்தின் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா இன்று சனிக்கிழமை (22) நடைபெற்றது..

மாமாங்கேஸ்வரருக்கு மூலஸ்தான பூஜை இடம்பெற்று  பஞ்சமுக விநாயகருக்கு வசந்தமண்டப பூஜை நடைபெற்ற பின்பு சுவாமி உள்வீதி வலம் வந்து தேரில் ஆரோகணித்ததும் தேரோட்டம் இடம்பெற்றது.
ஆலய பிரதம குரு சிவப்பிரம்மஸ்ரீ இரங்கவரதராஜ சிவாச்சாரியார் தேரோட்டக்கிரியைகயை நிறைவேற்றினார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான அடியார்கள் வடம்பிடித்திழுத்து தங்கள் நேர்த்திகளை நிறைவேற்றினர்.