சுங்க இசைவிற்காக இணையத்தளம் ஊடாகக் கொடுப்பனவுகளை செலுத்த புதிய தளம் அறிமுகம்

சுங்க இசைவிற்காக இணையத்தளம் ஊடாகக் கொடுப்பனவுகளை செலுத்தக்கூடிய வகையில் புதிய கொடுப்பனவுத்தளம் ஒன்று, இலங்கை மத்திய வங்கியின் கண்காணிப்பின் கீழ் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

Lanka Pay கொடுப்பனவு கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன தலைமையில் அறிமுகப்படுத்தல் வைபவம் இன்று கொழும்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மத்திய வங்கியின் அளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மற்றும் சுங்கப் பணிப்பாளர் நாயகம் சூலாந்தன பெரேரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மத்திய வங்கியின் பூரண கண்காணிப்பின் கீழ் Lanka Clear நிறுவனம் ஊடாக செயற்படுத்தப்படும் இந்த கொடுப்பனவு தளத்தை இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன அரம்பித்து வைத்தார்.

இலங்கை சுங்கத்தின் அனைத்து கொடுப்பனவுகளையும், இன்று முதல் அனுமதிப்பத்திரம் பெற்ற அனைத்து வணிக வங்கிகளின் ஊடாக ஒன்லைன் மூலம் மேற்கொள்ள முடியும்.