சுவாமி விபுலானந்தரின் 70 ஆவது சிரர்ர்த்த தின மற்றும் ஸ்தாபகர் தின உர்வலம்

எஸ். .பாக்கியநாதன்
சுவாமி விபுலானந்தரின் 70 ஆவது சிரர்ர்த்த தினம் மற்றும் கல்லடி சிவானந்தா வித்தியாலய ஸ்தாபகர் தின ஊர்வலம் என்பன  புதன்கிழமை (19) கல்லடியில் நடைபெற்றன.
சிவானந்தா பாடசாலையில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் மட்டக்களப்பு –கல்முனை பிரதான வீதி வளியாகச் சென்று அவரின் சமாதிவரை சென்றது.
சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபையின் தலைவர் கே. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லடி ஸ்ரீ இராமகிருஷ;ணமிசன் தலைவர் சுவாமி பிரபு பிரேமானந்தாவினால் சமாதிக்கு தீபம் காட்டி மலரஞ்சலி செலுத்தினார்.
கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரி ஆசிரியைகள் மற்றும் மாணவர்களினால் விபுலானந்தரின் பாடல்கள் பாடப்பட்டதோடு கலந்து கொண்டவர்களால் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.