குமுழமுனையில் நடமாடும் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை பிரதேசத்தில் மக்களுக்கான பொலிஸ் சேவைகள் கிராமத்திலேயே வழங்கும் நோக்கத்துடன் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைவாக முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அதிகாரி அவர்களால் நடமாடும் பொலிஸ் நிலையம் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த பிரதேசத்தை அண்டியுள்ள கிராமங்களை சேர்ந்த 600க்கு மேற்ப்பட்ட குடும்பங்களை சேந்தவர்கள்  போக்குவரத்து வசதிகள் குறைவான நிலையில் 15 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு  சென்றே தமது தேவைகளை பூர்த்திசெய்யவேண்டியிருந்தது.

இந்நிலையில் மக்களுக்கான சேவைகளை இலகுபடுத்தும் நோக்கோடு இந்த நடமாடும் பொலிஸ் நிலையம் இன்று திறந்துவைக்கப்பட்டது இந்த பொலிஸ் நிலையத்தினூடாக டெங்கு ஒழிப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டவிரோத செயற்ப்பாடுகளை தடுத்தல் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு செயற்ப்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது

அத்தோடு இன்றைய தினம் பிரதேச மக்களுக்காக மரக்கன்றுகளும் பொலிசாரால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது