புதிய தேர்தல் சட்டத்தில், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் இருமடங்கு

புதிய தேர்தல் முறைமையின் கீழ் நடாத்தப்படவுள்ள எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அச்சபைக்கான உறுப்பினர்களின் அளவு இருமடங்கு அதிகரிக்கும் என கடற்றொழில் மற்றும் கடல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்..

தற்பொழுது தயாரிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைகள் சட்ட மூலத்துக்கு அமைய அச்சபைகளின் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 8400 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. இது தற்பொழுதுள்ள எண்ணிக்கையிலும் இரு மடங்காகும்.

இந்த எண்ணிக்கையை இன்னும் குறைத்துக் கொள்வது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கருத்தாக இருந்தபோதிலும், அதனைச் செய்யப் போனால் தேர்தலுக்கு இன்னும் காலத்தைச் செலவு செய்ய வேண்டி ஏற்படும். இதனால், தற்போதைய சட்ட மூலத்துக்கு உடன்பட வேண்டி வந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

கொழும்பு டார்லி வீதியிலுள்ள ஸ்ரீ ல.சு.க.யின் தலைமைக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Thanks

Daily Ceylon.