தரவை துயிலும் இல்லத்தில் 2ம் கட்ட சிரமதானம்

மட்டக்களப்பு கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம் இன்று காலை 9.00 மணியில் இருந்து இடம்பெற்றது.

கிரான், சந்திவெளி, குளாவடி, தரவை, சின்ன மீயான்கல் குளம், மீயான்குளம், ஈரளக்குளம் போன்ற கிராம மக்கள், குடிம்பிமலை கிராம அபிவிருத்திச் சங்கம், ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள் என பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

கடந்த மாதம் 26ம் திகதி குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தின் ஆரம்பக்கட்ட வேளைகள் ஆரம்பித்தாலும் இன்றைய தினம் கனரக வாகனங்கள், பெருமளவான பொது மக்களின் பங்களிப்புடன் சிரமதானம் இடம்பெற்றது.

விடுதலைப் புலிகளின் பிரதான துயிலும் இல்லமாக இருந்த துயிலும் இல்லம் இராணுவத்தினரால் கல்லரைகள் உடைத்து அழிக்கப்பட்ட நிலையில் பற்றைக்காடுகள் நிரம்பிக் காணப்பட்ட நிலையில் குறித்த இடத்தை சுத்தப்படுத்தி எதிர்காலத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான இவ் வேளைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.