செங்கோலுடன் வெளியேறிய அவை தலைவர்

வடமத்திய மாகாண சபையின் அவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் முன்னெடுக்கப்படும் நிலையில், அவையின் செங்கோலுடன் அவைத் தலைவர் ரி.எம்.ஆர். சிறிபால வெளிநடப்பு செய்தார்.
இதன் காரணமாக மாகாண சபையில் அமளி துமளி நிலை ஏற்பட்டது.
அவைத் தலைவருக்கு எதிரான குறித்த நம்பிக்கையில்ல பிரேரணையானது இன்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதாக, கடந்த 13 ஆம் திகதி அவையின் ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆயினும் அவைத் தலைவருக்கு எதிராக கடந்த அமர்வில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, தற்போதைய அவையின் செயலாளரின் தேவைக்கேற்ப மாற்றியமைத்துள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியான ஆளும் கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் 11 பேர் இணைந்து கொண்டுவந்த குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (18) விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதற்கு அவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதன்போது, மாகாண சபையில் சுமூகமற்ற நிலைமை ஏற்பட்டபோது, இதனையடுத்து, அவைத் தலைவர் டி.எம்.ஆர். சிறிபால செங்கோலுடன் வெளிநடப்பு செய்தார்.
பின்னர், பிரதி அவைத் தலைவர் டி.எம். அமரதுங்க அவைக்கு தலைமை தாங்கினார்.
தொடர்ந்தும் எதிக்கட்சியினர் நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்தமையால் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கூச்சல், குழப்பம் விளைவித்தனர். ஒரு சிலர் கீழே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, அவை பிற்பகல் 2.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் தெரிவித்தார்.