தாந்தாமலை ஸ்ரீமுருகன் ஆலய கொடியேற்றம்.

(படுவான் பாலகன்)  மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள, கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு இன்று(17) திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.

சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக்குருக்கள் தலைமையில் பூசை நிகழ்வுகள் இடம்பெற்று, கொடியேற்ற நிகழ்வும் நடைபெற்றது. இவ்வாலயத்தில் தொடர்ச்சியாக திருவிழாக்கள் நடைபெற்று எதிர்வரும் 07.08.2017ம் திகதி திங்கட்கிழமை தீர்த்தோற்சவத்துடன் ஆலய உற்சவம் நிறைவு பெறவிருப்பதாக ஆலய பரிபாலனசபையினர் தெரிவித்தனர்.