அறிவாலயத்தின் ஏற்பாட்டில்கொக்கட்டிச்சோலையில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 2016ம் ஆண்டு மாவட்டவெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(16) நடைபெற்றது.
பண்டாரியாவெளி அறிவாலயம் அமைப்பின்   தலைவர் அ.நல்லரெட்ணத்தின்ஏற்பாட்டில், நடைபெற்ற நிகழ்வில்  மாணவர்களுக்கு தலா 5ஆயிரம் ரூபா பணம் மக்கள் வங்கி சேமிப்பு கணக்கில் வைப்பு செய்யப்பட்டு,  62 மாணவர்களுக்கு இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
எஸ்.முகுந்தன் தலைமையில் நடைபெற்ற, இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன்,  முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் மற்றும் ஏனைய அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.