உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் இறுதி வாரத்தில்

நாடு முழுக்க உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் இறுதி வாரத்தில் நடைபெறுவதற்கான சாத்தியம்  அலரி மாளிகையில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது..

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளான அமைச்சர்கள் நிமல் சிறிபால சில்வா, ரவுப் ஹகீம், மனோ கணேசன், ரிசாத் பதுதின், கபீர் ஹசிம், பைசர் முஸ்தபா, லசந்த அழகியவன்ன, அஜித் பெரேரா,அனுரகுமார திசாநாயக்க, எம். ஏ. சுமந்திரன் மற்றும் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, சட்டமா அதிபர் ஆகியோர் கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.