வித்தியா படுகொலை வழக்கு: சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க கைது

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் தப்பிச் செல்வதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றத் தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாவட்ட பொறுப்பதிகாரியாக செயற்பட்ட போது, வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச்செல்ல உதவியதாக இவர் மீது நீதிமன்றில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.