அஹிம்சாவினால் குளிர்சாதனப் பெட்டி வழங்கிவைப்பு

போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் இயங்கி வரும் விபுலானந்த சிறுவர் இல்லத்திற்கு அஹிம்சா நிறுவனத்தினால் குளிர்சாதனப் பெட்டி ஒன்று அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

36 ஆண் பிள்ளைகளைக் கொண்டு இயங்கி வரும் இவ்வில்லத்திற்கு குளிர்சாதனப் பெட்டி ஒன்றின் தேவை நீண்ட காலமாக இருந்து வந்தது. அத்தேவையை இல்லத்தினை நடாத்தி வரும் நிர்வாகத்தினர் அஹிம்சா நிறுவனத்தின் தலைவர் வி.விஜயராஜாவைக் கேட்டுக் கொண்டதை அடுத்து இக் குளிர்சாதனப் பெட்டி வழங்கி வைக்கப்பட்டது.

குளிர்சானைப் பெட்டியை வழங்கி வைக்கும் நிகழ்வில் அஹிம்சா நிறுவனத்தின் தலைவர் வி.விஜயராஜா, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவரும் அஹிம்சா நிறுவனத்தின் ஆலோசகருமான த.வசந்தராஜா, அஹிம்சா நிறுவனத்தின் நோர்வே நாட்டுக்கான இணைப்பாளர் சு.பரணிதரன் மற்றும் இல்ல நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.