கணவனின் தாக்குதலில் மனைவி உயிரிழப்பு!! – கணவன் கைது

அம்பாறை திருக்கோவில் முனையக்காடு பகுதியில் கணவன் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குடும்பத்தகராறு காரணமாக மனைவி மீது கணவன் தாக்குதல் நடத்தியுள்ளார் என்றும் கூறப்படுகின்றது. 40 வயதான ஒரு பிள்ளையின் தாயே உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் திருக்கோவில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும், மேலதிக விசாரணைகள் நடத்தப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.