கொக்கட்டிச்சோலைப் பகுதியில் இருவர் கைது, உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டது

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண்ணேற்றி செல்ல முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது மண்ணை ஏற்றிய உழவு இயந்திரங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று(14) வெள்ளிக்கிழமை மதியவேளையில் ஒரு உழவு இயந்திரமும், வெள்ளிக்கிழமை இரவு ஒரு உழவு இயந்திரமுமாக இரு உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் குறிப்பிட்டனர்.