பொலித்தீனுக்கு பதிலாக வாழை இலை

பொலித்தீன் பாவ­னைக்கு மாறாக  அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள புதிய வகை பொருட்­க­ளையும் வாழைஇலை­க­ளையும் பயன்படுத்து மாறு மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

எதிர்­வரும் நாட்­களில் இந்த விடயம் குறித்த சோதனை நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு சட்ட நட­வ­டிக்கை எடுக்க தீர்­மா­னித்­துள்­ள­தாவும் அதி­கார சபை அறி­வித்­துள்­ளது.

அதி­கார சபையின் கழிவு முகா­மைத்­துவ பணிப்­பாளர் அஜித் விஜே­சுந்­தர  இது தொடர்பில் தெரி­விக்­கையில்,

பொலித்தீன் பாவ­னை­யினை கட்­டு­ப­டுத்தும் நோக்­கிலும் சூழல் பாது­காப்­பி­னையும் கருத்­திற்­கொண்டும் விரைவில் உக்கிப் போகின்ற பொலித்தீன் வகை­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ளோம். அவை 100 வீதம் உக்­கிப்­போகும் வகை­யி­லான மூலப்­பொ­ருட்­களை கொண்டு தயா­ரிக்­கப்­பட்­ட­வை­யாகும்.

அவற்­றையும் வாழை இலை போன்ற இயற்கை பொருட்­க­ளையும்  உணவு எடுத்துச் செல்­வ­தற்­காக பயன்­ப­டுத்­து­மாறு அறி­வு­றுத்தல் விடுக்­கின்றோம்.  அதேபோல் குப்பை போடு­வ­தற்கும் சிறு பொருட்­களை எடுத்துச் செல்­வ­தற்கும் புதிய வகை பைகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்த புதிய வகை பைகளை   பயன்­ப­டுத்­தாத பட்­சத்தில் பயன்­பாட்டில் உள்ள இடங்­களை சோத­னை­யிட்டு பாவ­னை­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். மத்திய சுற்றாடல் அதிகார சபையாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் இல்லாதபோதும் நீதிமன்றம் வாயிலாக சட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார்.