செட்டிபாளையம் பொதுநூலகத்துக்கு உள்நுழையும் வாசலில் மின்கம்பம்

க.விஜயரெத்தினம்)

மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபைக்கு உரித்தான செட்டிபாளையம் பொதுநூலகத்துக்கு உள்நுழையும் வாசலில் மின்கம்பம் உடைந்து கிடப்பில் காணப்படுவதால் வாசகர்களின் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதாக வாசகர்கள்,பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள். அதாவது பொதுநூலகத்திற்கு மோட்டார்சைக்கிள்,துவிச்சக்கர வண்டியில் வரும் வாசகர்கள் தங்களின் வாகனங்களை நூலகத்திற்கு வெளியே தரித்துவைத்து சிரமங்களுக்கு மத்தியில் பத்திரிகையை பார்க்கச் உள்நுழைகின்றார்கள்..

இவ் நூலகத்திற்கு முன்பாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பாரிய விபத்து ஒன்று ஏற்பட்டது.இதனால் குறித்த மின்கம்பம் வாகனத்தினால் மோதுண்டு உடைந்து நூலகத்தின் நுழைவாயில் காணப்படுகின்றது.இவ்விபத்துச்சம்பவம் கடந்தமாதம் 13 திகதி ஏற்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.இவ் பொது நூலகம் அமைந்திருப்பது கல்முனை – மட்டக்களப்பு நெடுஞ்சாலை வீதியின் அருகாமையில் அமைந்திருக்கின்றது.இதனால் நூலகத்திற்கு வரும் வாசகர்கள் தங்களின் வாகனங்களை நெடுஞ்சாலை வீதியில் நிறுத்திவைத்து விட்டுச்சென்றால் போக்குவரத்துக்குக்கு அவ்வளவு ஆரோக்கியமாக இருக்காது.இவ்விடம் நெடுஞ்சாலையின் வளைவு காரணமாக அடிக்கடி விபத்து ஏற்படும் பிரதேசமாக இருப்பதால் வாகனங்களை நிறுத்தி வைப்பது நல்லதல்ல.
பொதுநூலகத்தின் நுழைவாயில் உடைந்து காணப்படும் மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என்று ஊடகவியலாளர்  க.விஜயரெத்தினம் ஆகிய நான் கடந்த வெள்ளிக்கிழமை (7.7.2017) களுவாஞ்சிகுடி இலங்கை மின்சார சபையின் அத்தியட்சகருடன் காரியாலய தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரச்சனை எட்டி வைத்தேன்.இதற்கு மின் அத்தியட்சகர் எதிர்வரும் திங்கட்கிழமை சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றுவதற்குரிய நடவடிக்கை எடுத்து உறுதிமொழி வழங்கினார்.ஆனால் உறுதிமொழி கூறிய நாள் கடந்து இன்றுடன் நான்குநாட்கள் கடந்துவிட்டது.
எனவே கிழக்கு மாகாண இலங்கை மின்சாரசபையின் பிரதம பொறியியலாளர் அலுவலகம்,மட்டக்களப்பு மாவட்ட பொறியியலாளர் கவனம் செலுத்தி சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி வாசகர்களின் அசௌரியங்களை தீர்த்துவைக்க வேண்டும்.