ஏறாவூர்ப்பற்று பிரதே செயலகப் பிரிவில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்

(க.விஜயரெத்தினம்)

பாடசாலை மாணவர்கள் மறறும் கிராம மட்ட அமைப்புகள் ஊடாக போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் வீதிநாடகம் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று (14) வெள்ளிக்கிழமை நடைபெற்றது..

ஏறாவூர்ப்பற்று பிரதே செயலகப் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 14 பாடசாலைகளில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிழக்வுகள் நடைபெற்றதாக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் தெரிவித்தார்.

“சிறுவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு விரைவில் அடிமையாகக்கூடியவர்கள் அவர்கள் தொடர்பில் விழிப்பாக இருப்போம்” எனும் தொனிப்பொருளின் விழிப்புணர்வு ஊர்வலம் செங்கலடி நகரில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் தலைமையிலர் நடைபெற்றது. இதில் செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக ஊழியர்கள் சமுர்த்தி மகாசங்கம், மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு போதை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான துண்டுப்பிரசுரங்களையும் வினியோகித்தனர்.

புகைத்தல் புற்றுநோயை உருவாக்கும், குடி நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு, புகைத்தல் உங்களையும் எங்களையும் நேசிப்பவர்களையும் பாதிக்கும், குடிபோதையில் குடும்ப சந்தோசத்தை இழக்காதீர்கள், போதைப்பொருள் பாவனை சட்ட ரீதியான குற்றமாகும், போதை நாம் காசு கொடுத்து வாங்கும் வேதனை இறுதியில் மரணம், போதையை ஒழிப்போம் பாதையை வளர்ப்போம், போதைப் பொருள் பாவைனையிலிருந்து நண்பர்களை பாதுகாப்போம், போதையில் மோதி பாதையை மாற்றாதே, உயிரை அழந்குத் உடலை உருக்கும் கொடிய எதிரி போதை, போதையெனும் சாக்கடையில் விழாதீர்கள், போதை போதை அது சாவின் பாதை, மேதையை அழிக்கும் போதை போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பததைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வுப் பேரணியில் ஈடுபட்டனர்.