செட்டிபாளையம் திருவள்ளுவர் நுண்கலை மன்றம் நடாத்தும் கலை இலக்கிய விழா.

மட்டக்களப்பு செட்டிபாளையம் திருவள்ளுவர் நுண்கலை மன்றம் நடாத்தும் கலை இலக்கிய விழா அதன் தலைவர் மு.பாலகிருஷ்ணன் தலைமையில் செட்டியாளைய மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று பி.ப.2.30 மணிக்கு நடைபெறவுள்ளது..

      இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக திரு.எஸ்.பாஸ்கரன் மேலதிக செயலாளர் சிறச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீழ் குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு,  கலாநிதி.எஸ்.அமலநாதன் மேலதிக செயலாளர் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, கலாநிதி எம்.கோபாலரெத்தினம் மேலதிக பணிப்பாளர் நாயகம் முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் திறைசேரி ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக திரு.எஸ்.ரங்கநாதன் பிரதேச செயலாளர் மண்முனை தென் எருவில் பற்று, கட்டிட தொழிநுட்ப கலைத்துறை சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர்களான கலாநிதி.சு.சிவரெத்தினம், திருமதி.பிரியதர்சினி ஜெகதீஸ்வரன் ஆகியோரும், கொளரவ அதிதிகளாக திரு.க.சுந்தரலிங்கம் உதவிக் கல்வி பணிப்பாளர்(அழகியல்), திரு.த.அருள்ராசா அதிபர், திரு.ச.சோசுந்தரம் கலாசார உத்தியோகத்தர் ஆகியோரும்,  கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளர்.
     இவ் இலக்கிய விழாவில்  தேசபந்து தா.கோபாலகிருஸ்ணன் ஆசிரியரினால் ஆராய்ந்து பதிப்பிக்கப்பட்ட வைகுந்த அம்மானை என்ற நூல் வெளியீடு செய்யப்படவுள்ளதுடன், கிராமத்தில் பல்துறைசார்ந்த  விற்பன்னர்களை கௌரவித்து பட்டமும் வழங்கப்படவுள்து. அந்த வகையில் ஆன்மீகத்துறையில் சிவஸ்ரீ மு.சுந்தரம்பிள்ளை, இலக்கிய துறையில் தேசபந்து தா.கோபாலகிருஸ்ணன், கிராமிய இலக்கியகலைத்துறையில் திரு.வை.பரசுராமன் ஆகியோர் இதன்போது பட்டம் வழங்கி கௌவரவிக்கப்படவுள்ளனர். இவ் விழாவில் சிறப்பு கலை நிகழ்வுகளாக பாடசாலை மாணவிகளின் கிராமிய நடனம், சாஸ்திரிய நடனம், நாடகம் போன்றன இடம் பெறவுள்ளது