ஜனாதிபதிக்கும், சமயத் தலைவர்களுக்கும் இடையில் மோதல் முயற்சி தோல்வி

ஜனாதிபதிக்கும், சமயத் தலைவர்களுக்கும் இடையில் மோதல்களை ஏற்படுத்துவதற்கு சிலர் தரப்பினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்திருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பாக  கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார  கருத்துத் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் பயணத்தை தடுக்கும் நோக்கில் தோல்வி கண்ட சில குழுக்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு மூன்று பீடங்களின் மஹாசங்கத்தினரின் நல்லாசி கிடைத்துள்ளது. பௌத்த சாசனத்i;த ஊக்குவிக்கும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது. இதற்கு எதிரான பிரேரணைகள் எவற்றுக்கும் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு கிடைக்காதென்றும் அவர் தெரிவித்தார்.
புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் போது நிறைவேற்று அதிகார முறை, இறைமை தொடர்பிலான எண்ணக்கரு தொடர்பான அதிகாரப்பகிர்வு, ஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தைப் பகிர்தல், புதிய தேர்தல் முறையைத் தயாரித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார  மேலும் தெரிவித்தார்.