காத்தான்குடி வாழைச்சேனை வைத்தியசாலைகளில் அபிவிருத்திட்டங்கள் கையளிப்பு

காத்தான்குடி_ஆதாரவைத்தியசாலையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வெளிநோயாளர்_ மற்றும் பல்சிகிச்சைப்_பிரிவு, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விஷேட_வைத்திய_நிபுணர்_விடுதி என்பன இன்று (13.07.2017 / வியாழக்கிழமை ) காலை கிழக்குமாகாண கௌரவ முதலமைச்சர்_ஹாபிஸ்_நசீர்_அகமட் அவர்களினால் வைபவ ரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது..

கிழக்குமாகாணசபை கௌரவ உறுப்பினர் ஷிப்லி பாரூக் அவர்களின் கோரிக்கைக்கமைவாக கௌரவ முதலமைச்சரினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 18 மில்லியன் ரூபா செலவில் இவ்விரண்டு வேலைத்திட்டங்களும் நிறைவுசெய்யப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் கௌரவ முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களுடன் சுகாதார அமைச்சர் கௌரவ ALM.நசீர் , மாகாணசபை உறுப்பினர் கௌரவ ஷிப்லி பாரூக் உட்பட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகளும் , பொதுமக்களும் கலந்துகொண்டார்கள்

இதேவேளை வாழைச்சேனை ஆதாரவைத்தியசாலையில் கிழக்குமாகாண கௌரவ முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 21 மில்லியன் குறித்தொதுக்கப்பட்ட மாகாண நன்கொடை நிதியின் மூலமாக நிர்மாணிக்கப்பட்ட மருந்துக்களஞ்சியம், மருத்துவ ஆய்வுகூடம் ஆகியவற்றினை உள்ளடக்கிய வைத்தியசாலைக் கட்டடம் இன்று (13.07.2017 / வியாழக்கிழமை) கௌரவ முதலமைச்சரால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.