மங்களராமய விகாரை பணியாளரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல்.

(க. விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு மங்களாராமய விகாரையில் வேலை செய்யும் ஒருவரை தாக்கி கையை முறித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைசெய்யப்பட்டவரை எதிர்வரும் ஜூலை 19ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு புதன்கிழமை (12) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் மாணிக்கவாசகம் கணேசராசா உத்தரவிட்டார்..

பலப்பிட்டிய தேவகே என்ற இளைஞனைத் தாக்கிய ரஸாக் சப்ராஸ் என்ற இளைஞனே கைதுசெய்யப்பட்டு அடையாள அணிவகுப்புக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அவ்விகாரையின் தேரரொருவர் கொடுத்த அழுத்தம் காரணமாக சந்தேக நபர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் மாணிக்கவாசகம் கணேசராசா முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டபோது நீதிவான் விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தார்.