படுவான்கரையில் சாதனை ஈட்டிய மாணவர்களை பாராட்டுதலும் கௌரவித்தலும்.

.
மட்டக்களப்பு மேற்கு வல்வி வலயத்தில் 2016ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 62 மாணவர்களை பாராட்டி வங்கிக்கணக்குப் புத்தகம் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 16ம் திகதி காலை 9.30மணிக்கு கொக்கட்டிச்சோலை பிரதேச கலாச்சார மண்டபத்தில் அறிவாலயத்தின் ஆலோசகர் சி முகுந்தன் தலைமையில் நடைபெறும்..

அலையப்போடி நல்லரெத்தினம் அவர்களினால் வழிநடாத்தப்படும் அறிவாலயம் நிறுவனத்தினால்  ஆண்டுதோறும் நடாத்தப்படும் இக்கௌரவிப்பு நிகழ்வில் இவ்வாண்டு ஒவ்வொரு மாணவருக்கும் 5ஆயிரம் ரூபா வைப்பிலிடப்பட்ட வங்கிப்புத்தகம் கையளிக்கப்படவுள்ளது.
நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன்,ச.வியாலேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதுடன், கௌரவ அதிகளாக வலயக்கல்விப்பணிப்பாளர் அகிலா கனகசூரியம்,பிரதேச செயலாளர் தட்சனாகௌரி திணேஸ், முன்னாள் வலயக்கல்விப்பணிப்பாளர் சத்தியநாதன்,மக்கள் வங்கி முகாமையாளர் மா.மோகணதாஸ்  ஆகியோருடன் விசேட அதிகளும், அழைப்பு அதிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.