கடமைகளைப் பொறுப்பேற்றார் கிழக்கின்புதிய ஆளுநர்

 

கிழக்குமாகாணத்தின் புதிய ஆளுநராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரோஹித்த_போகொல்லாகம இன்று (11.07.2017 / செவ்வாய்க்கிழமை) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்..

இந்நிகழ்வில் கிழக்குமாகாண கௌரவ முதலமைச்சர்_அல்ஹாஜ்_அல்ஹாபிழ்_நசீர்_அஹமட் மற்றும் கிழக்குமாகாண கௌரவ அமைச்சர்கள், உறுப்பினர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

இதனை சிறப்பிக்குமுகமாக கௌரவ முதலமைச்சரால் கிழக்கின் புதிய ஆளுநருக்கு இன்று இரவு விருந்துபசார நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.