பாடசாலை மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி அவசியம்

பாடசாலை மாணவர்கள் ஆளுமை நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். வெறும் பாடசாலைக் கல்வியினால் மட்டும் அத்தகைய ஆளுமையைப் பெற்றுவிட முடியாது. பல்வேறு விதமான பயிற்சிகளினூடாகவே ஆளுமையை வளர்க்க முடியும்

அமிர்தகழி சித்தி வினாயகர் மகா வித்தியாலய மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியை வித்தியாலய மண்டபத்தில் ஜூலை 8ந் தேதி ஆரம்பித்து வைத்துப் பேசுகையில் அவ்வித்தியாலயத்தின்; அதிபர் திருமதி எஸ்.தர்மசீலன் இவ்வாறு உiயாற்றினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் இன்றைய இளம் சமூகம் திசைமாறிச் செல்வதையே காணக்கூடியதாக உள்ளது. இந்நிலை தொடருமானால் அது சமூகத்துக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். எனவே இளம் சமூகத்தினை நேரிய வழிப்படுத்தும் பொறுப்பு இன்றைய பெரியோரின் கைகளில் உள்ளது என்றார்.

39 மாணவர்கள் பங்கு பற்றிய இந்த ஒரு நாள் தலைமைத்துவப்  பயிற்சியை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேர்ச்சி பெற்ற பயிற்றுனர் குழு நடாத்தியது. பயிற்றுனர் குழுவுக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராஜா தலைமை தாங்கியிருந்தார்.

காலையில் தொடங்கி மாலையில் முடிவுற்ற இந் நிகழ்வில் பாடசாலை அதிபரோடு ஆசிரியர்கள், கல்வி அதிகாரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி முதலானோர் கலந்து கொண்டிருந்தனர்.