உயிர் தியாகம் என்பது சாதாரண விடயமல்ல. அவற்றை யாரும் கொச்சைப்படுத்த முடியாது.க.துரைரெட்ணசிங்கம் M.P

”உயிர் தியாகம் என்பது சாதாரண விடயமல்ல. அவற்றை யாரும் கொச்சைப்படுத்த முடியாது. இழக்கப்பட்டவர்கள் அனைவரும் இன்று இருந்தால் பெரும் வளங்களாக இருப்பர் .அவர்களது தியாகங்கள் மதிக்கப்பட வேண்டியவையாகும்.

என பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.நேற்றய தினம் மாலை 3.45மணியளவில் சம்பூர் கலாசார மண்டபத்தில் நடந்த நினைவஞ்சலி நிகழ்வில்  கலந்துகொண்டு பேசுகையில் மேற்படி விடயத்தை தெரிவித்தார்..

கடந்த 7.7.90இலிருந்து 1995வரை சம்பூர், கடற்கரைச்சேனை,கூனித்தீவு, சூடைக்குடா போன்ற பகுதிகளில்  நடந்த 53பொதுமக்கள்,மாணவர்கள்,அசிரியர்கள் படுகொலையின் 27வது ஆண்டுநிறைவு தினநிகழ்வு சம்பூர் மகாவித்தியாலய வெளியக  பழைய மாணவர்சங்கத்தின் தலைவர் அ.ஸதீஸ்குமார் தலமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில்   பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு.நாககேஸ்வரன்,   தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலைத்தலைவர்  ஸ்ரீ. ஞானெஸ்வரன் உள்ளிட்ட பல இலக்கியவாதிகள் பொது மக்கள் என அதிகளவிலானோர் கலந்துகொண்டனர்.

இங்கு கவியரங்கும் அஞ்சலி  நிகழ்வும் நடைபெற்றன.

இங்குமேலும் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகையில்,இந்த இறந்த மக்களின் நினைவலைகள் நீறு பூத்த நெருப்பாக பலரது நெஞ்சங்களிலும் இருந்து வந்துள்ளது. ஒன்று இரண்டல்ல 27வருடங்கள் களிந்த நிலையிலும் அந்த பாதிப்பு மறக்கப்பட்டதாக இல்லை.

அவ்வாறான மக்களின் நினைவஞ்சலிகளை செய்ய வேண்டும். அவை பற்றி பேச வேண்டும் என்றெல்லாம்  நினைத்து இந்நிகழ்வை ஒழுங்கு செய்த பழைய மாணவர்களுக்கு எனது நன்றி களைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்தக்காலத்தில் இறந்தவர்கள் அனைவரும் பெறுமதிவாயந்த வளங்கள். அமரர் செல்லக்குட்டி  முன்னாள் சம்பூர் மகாவித்தியாலய அதிபர் அவர்கள் முன்னாள் கிராமத்தலைவர் இராசரெட்ணம் அவர்கள், கூனித்தீவு சிவராஜா பொன்றவர்கள் சமூகத்தின் முன்னோடிகள்,தலைவர்கள்,இவர்களைப்போன்றவர்கள்  இன்றிருந்தால் அவர்கள் எமது சமூகத்தின் முக்கிய வளங்களாக திகழ்ந்திருப்பர்.  இவர்கள் அனைவரையும் நான் நன்கு அறிவேன் ஆகவே இவர்களைப்போன்றவர்களின் தியாகங்களை இழப்புக்களை  யாரும் கொச்சைப்படுத்தமுடியாது.

எமது போராட்டத்தைப்பொறுத்தவரை அது இன்னும் முடிவுக்கு வரவில்லை. சாதிவீகம் பின்னர் ஆயுதப்போராட்டம் என்று  அது தொடர்ந்த வண்ணமே உள்ளது. தலைவர் குறிப்பிட்டதுபோன்று போராட்ட வடிவங்கள் மாறினாலும் போராட்ட இலக்கும்  எண்ணங்களும் மாற்றமடையவில்லை. எமக்கான விடுதலைப்பயணம் இன்னும் காலம்கடந்தும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.இதனையடைவதில் நாம் என்றும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியது இந்தக்காலத்தின் அவசியமானதாகும்.

உணர்வுகள் அவசியமானதாகும்  ஆனாலும் காலம் அறிந்து நாம் செயற்படுதல் அவசியமானதாகும்.அந்த உணர்வு எம்மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதாகவும் அமைய வேண்டும்

அதற்காக கருத்துக்களை எவரும் ஜனநாயக ஒழுங்கிற்கிணங்க  தெரிவிக்கலாம் அது தவிறில்லை. அந்த அடிப்படையில் இங்கும் பலரும் கருத்துக்களை முன்வைத்தனர்.

அரசாங்கத்தைப்பொறுத்தவரை சாதக மான கருத்துக்களை வெளியிடும் அமைச்சர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனாலும் எமது முயற்சிகள் செயற்பாடுகள் பல இடர்பாடுகளுக்குள் ளும் தொடர்ந்தவண்ணமுள்ளன. எமது இந்த மக்களின் தியாகங்கள் என்றோ ஒரு நாள் நிச்சயம் நிறைவேறும்  அதனை அடைய நாம் எதிர்காலத்திலும் ஒற்றுமைப்பட்ட மக்கள் எழுச்சிப்போராட்டங்கள் மூலம் அடையும் நிலமை ஏற்படலாம் எனவே முக்கியமாக நாம் எமது ஒற்றுமையை கைவிடலாகாதுஎனவும் சுட்டிக்காட்டினார்.