உண்ணிச்சை இறுநூறுவில் கிராமத்தில் 30 வருடங்களுக்கு பிறகு நிர்மானிக்கப்பட்ட புதிய பள்ளிவாயல்

மட்டக்களப்பு உண்ணிச்சை இறுநூறுவில் கிராமத்தில் 30 வருடங்களுக்கு பிறகு நிர்மானிக்கப்பட்ட புதிய பள்ளிவாயல் வெள்ளிக்கிழமை(7.7.2017) திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உண்ணிச்சை இறுநூறுவில் கிராமத்திலிருந்து 1987ம் ஆண்டு இடம் பெற்ற அசாதரண சூழ் நிலையினால் இடம் பெயர்ந்த இக்கிராமத்திலிருந்த முஸ்லிம் குடும்பங்கள் காத்தான்குடியில் வசித்து வந்த நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான சூழ் நிலையில் மீண்டும் அங்கு மீளக்குடியேறி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தப்பள்ளிவாயல் சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வையின் முயற்சியின் பேரில் ஜம் இய்யத்துஸ் ஸபாப் அமைப்பின் அனுசரணையில் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பள்ளிவாயலை சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வை மற்றும் ஜம் இய்யத்துஸ் ஸபாப் அமைப்பின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.தாஸீம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்தப் பள்ளிவாயலின் முதலாவது ஜும்ஆத்தொழுகையையும் ஜும்ஆ உரையையும் மௌலவி எம்.பி.எம்.பாஹீம் நடாத்தி வைத்தார்.

இங்கு இடம் பெற்ற வைபவத்தில் சிப்பிமடு மௌத்த  விகாராதிபதி ஆரியவன் தேரர் மற்றும் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் வவுணதீவு பிரதேச சபையின் செயலாளர் கிராம உத்தியோகத்தர் உட்பட காத்தான்குடி உலமா சபை பிரதிநிதிகள் காத்தான்குடி பள்ளிவாயல் சம்மேளன பிரதி நிதிகள் சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்..