முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் ஆரம்பம்

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் சற்றுமுன் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்கள் தலைமையில்  ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது.

மாவட்டத்தின் இணைத்தலைவர்கலான வணிக வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன் வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோர் தலைமையில் இடம்பெற்று  வருகிறது

இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் சிவசக்தி ஆனந்தன் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் வடமாகாண பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன் வடமாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன் க.சிவநேசன் ஆ.புவனேஸ்வரன்     மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்