தடைசெய்யப்பட்ட தொழில்களை தடுக்குமாறு முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம்.

முல்லைத்தீவு கடற்ப்பரப்பில் நடைபெறுகின்ற சட்டவிரோத தொழில்களை தடைசெயுமாறு கோரி மீனவர்கள் போராட்டமொன்றை மேற்கொண்டனர்.

இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெற்றுவரும் நிலையில் மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுவருகின்றனர்

இவர்களை வடமாகான முதலமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடினர்

தடைசெய்யப்பட்ட தொழில்களுக்கு கடற்றொழில் நீரியல் வளதினைக்களம் மறைமுகமாக ஆதரவு வழகுவதாகவும் அவர்கள் இலஞ்சம்  பெற்று குறித்த தொழிலுக்கு அனுமதி வழங்குகிறீர்களா என தாம் எண்ணுவதாகவும் தென்பகுதி மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொழில் அதிகரித்துள்ளதாகவும் இவற்றை கட்டுபடுத்துமாறும் கோரி குறித்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்