மட்டக்களப்பில் ஊழலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊழல்வாதிகளை அரசாங்கம் வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாளை ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது..

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் பல வெளியாகி, அது இலங்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் நிலையில், ஊழல்வாதிகளை அரசாங்கம் அதிகாரத்தில் வைத்து கொண்டு ஊழலை ஊக்குவிப்பதை நிறுத்த கோரியும் ஊழல்வாதிகளை கைது செய்யுமாறு வலியுறுத்தியும் குறித்த ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து நாளை காலை 9 மணிக்கு காந்தி பூங்காவிற்கு முன் குறித்த இவ் ஆர்ப்பாட்ட பேரணியில் நடைபெறவுள்ளது.

இவ் ஆர்ப்பாட்ட பேரணியில் அனைத்து சிவில் சமூக பொது அமைப்புக்களையும் பொது மக்களையும் கலந்து கொள்ளுமாறு ஆர்ப்பாட்ட காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.