குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டமாவடி பகுதியில் ஆர்ப்பாட்டம்.

ஓட்டமாவடி கோறளைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட அல் மஜிமா தரசேனை மீள்குடியேற்ற பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (9) குறித்த பகுதி மக்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பிரதேச சபையினால் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள் அனைத்தும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கண்ட கண்ட இடங்களில் கொட்டுவதினால் பாரிய சுகாதராப் பிரச்சினையை மக்கள் எதிர் கொண்டுவருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துnகொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்.

குறித்த பகுதி 2005ம் ஆண்டு மீள் குடியேற்றப்பட்ட நிலையில் அங்குள்ள மக்கள் குறித்த குப்பை கழிவுகள் உரிய முறையில் சேகரித்து ஒழுங்கான முறையில் கொண்டாமை  காரணமாக குறித்த பகுதியில் மீள் குடியேற்றப்பட்ட மக்கள் வெளியேறும் நிலைமை மட்டுமல்லாது, பள்ளிவாசலில் தொழுகையை ஒழுங்கான முறையில் செய்யமுடியாமல் உள்ளது அவ்வளவு துர்நாற்றம், குறித்த பகுதியில் கொட்டப்படும் கழிவு எச்சங்களை சாப்பிட வரும் காட்டு யானையினால் மனித உயிர்களுக்கு பாரிய ஆபத்து இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஒழுங்கான முறையில் தரம்பிரித்து சேதனப் பசளை செய்யப்படும் பாரியதொரு செலவில் கட்டப்பட்ட தொழில்சாலை 2016ம் ஆண்டு மாவட்ட அரசாங்க அதிபரினால் திறந்துவைக்கபட்ட நிலையில் ஒழுங்காக இயங்காத நிலையில் உள்ளதுடன், மக்களின் பகுதிகளில் குப்பைக் கழிவுகளைக் கொட்டி பாரிய சுகாதார பிச்சினையையை ஏற்படுத்துகின்றனர் என ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது தெரிவித்தனர்.