காத்தான்குடி, வாழைச்சேனை ஆதாரவைத்தியசாலைகளின் புதிய கட்டிடங்களின் திறப்புவிழா முதலமைச்சர் தலைமையில்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் , கிழக்குமாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலமாக (2016) கௌரவ கிழக்குமாகாண முதலமைச்சர் அல்ஹாஜ் அல்ஹாபிழ் நசீர் அஹமட் (பொறியியலாளர்) அவர்களின் கரங்களினால் அடிக்கல் வைக்கப்பட்டு 7 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவுக் (OPD) கட்டிடம் மற்றும் 10.4 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட விஷேட வைத்திய நிபுணர் விடுதி (Consultant Quarters) ஆகியன முதலமைச்சரினால் எதிர்வரும் 13.07.2017(வியாழக்கிழமை) காலை 9.00 மணிக்கு திறந்துவைக்கப்படவிருக்கின்றன..

இந்த திறப்புவிழா நிகழ்வில் கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் கௌரவ ALM.நசீர் , கிழக்குமாகாண விவசாய அமைச்சர் கௌரவ கிருஷ்ணபிள்ளை துரைராசசிங்கம், கிழக்குமாகாணசபையின் பிரதி தவிசாளர் கௌரவ இந்திரகுமார் நித்தியானந்தன், கிழக்குமாகாணசபை உறுப்பினர்களான கௌரவ அல்ஹாஜ் ஷிப்லி பாறூக் , சுகாதார அமைச்சின் செயலாளர் K.கருணாகரன் மற்றும் கிழக்குமாகாண சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் K.முருகானந்தன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் திருமதி LM.நவரட்னராஜா மாற்றம் காத்தான்குடி வைத்திய அத்தியட்சகர் MSM.ஜாபிர் ஆகியோரும் பிரதேச பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.

இதேவேளை   வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் , கிழக்குமாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலமாக (2016) கௌரவ கிழக்குமாகாண முதலமைச்சர் அல்ஹாஜ் அல்ஹாபிழ் நசீர் அஹமட் (பொறியியலாளர்) அவர்களின் கரங்களினால் அடிக்கல் வைக்கப்பட்டு 21 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மருந்துக்களஞ்சியம், மருத்துவ ஆய்வுகூடம் ஆகியன எதிர்வரும் 13.07.2017 (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு முதலமைச்சரினால் திறந்துவைக்கப்படவிருக்கின்றன.