பாம்பு, தேளிலிருந்து மகனைக் காப்பாற்றுவதற்காக நிம்மதியாக நித்திரை செய்திருக்கவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பான வீட்டுத் தேவைகள் ஓரளவு பூர்த்தியடைகின்ற நிலையிருந்தாலுங்;கூட ஆங்காங்கே மிக வறிய நிலையில் வாழுகின்ற குடும்பங்கள் பாதுகாப்பான வீட்டுத்தேவையுடையோராக இன்னும் இருந்து கொண்டேயிருக்கின்றன. குறிப்பாக, குழந்தைகளையும் சிறுவர்களையும் வயது வந்த பெண்பிள்ளைகளையும் உடைய குடும்பங்கள், அதிலும் விஷேடமாக கணவனை இழந்த பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் படுகின்ற அவதி சொல்லுந்தரமன்று. ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் நிலையில் அக்குடும்பங்களை வைத்துப்பார்த்தால்த்தான் அக்குடும்பங்கiளின் நிலமையை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியும். இதனை புரிந்து கொண்ட இரக்க சிந்தனையுள்ள சிலரின் மனமுவந்த உதவிகளினூடாக அஹிம்சாவின் தொண்டர்கள் முன்னெடுத்த பணிகளில் ஒன்று மிகவும் வறிய மக்களுக்கான ‘சிறுவீடமைப்பு’
சுசாந்தன் சிந்துஜா ஒருமுளச்சோலையில் வாழுகின்ற கணவனால் கைவிடப்பட்ட 21 வயதுடைய ஓர் இளம் பெண். இவருக்கு 4வயதில் ஒரு ஆண்மகன். கூலித் தொழில் செய்தே பிழைத்து வருகின்றார். இவருடைய குடிசை வீடு உக்கி இறந்து போன நிலையில் உள்ளது. இரவில் நித்தரை செய்யும் போது பாம்பு, தேள் முதலானவற்றிலிந்து மகனைக் காப்பாற்றுவதற்காக அவர் நிம்மதியாக நித்திரை செய்திருக்கவில்லை.

இதனை அஹிம்சா நிறுவனத்தின் தொண்டன் மயூரன் அடையாளம் கண்டிருந்தான். அஹிம்சாவின் தலைவரை அழைத்து வீட்டினை பார்வையிடச் செய்தான். தலைவர் தனது நண்பர்களுக்கு நிலமையை எடுத்துரைத்தார். கிராம உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தினார். முடிவு ஒரு சிறிய பாதுகாப்பான வீடு உருவானது சிந்துஜாவுக்கும் அவரது நான்கு வயது மகனுக்குமாக. அவர்கள் இப்போது பாதுகாப்பான வீடொன்றில் வாழத் துவங்கியுள்ளார்கள்.

 

 

அஹிம்சா சமூக நிறுவனத்தினால் தொண்ணூறாயிரம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட வீட்டினை அக்கிராமத்தின் பதில் கிராம உத்தியோகத்தர் பி.பேரின்பம் முன்நிலையில் அஹிம்சா நிறுவனத்தின் தலைவர் வி.விஜயராஜா உத்தியோகபூர்வமாக நேற்று கையளித்து வைத்தார். இதன்போது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைத்தலைவரும் அஹிம்சா நிறுவனத்தின் ஆலோசகருமான த.வசந்தராஜாவும் பிரசன்னமாகியிருந்தார்