கபடி போட்டியில் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்ற பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய மாணவிகள்

  கபடி போட்டியில் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்ற பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய மாணவிகளை நேடியாக சென்று வாழ்த்தினார் பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர்.

இம்முறை நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலய மாணவர்கள் 17,20 வயது பிரிவு பெண்களுக்கான கபடிபோட்டியில் முதலாமிடத்தினைப் பெற்றுக் கொண்டனர். இம் மாணவிகளையே நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நீங்கள் தேசிய மட்டத்தில் சாதனை படைப்பதற்று  என்ன வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என மாணவர்களிடம் கேட்டுக் கொண்டதோடு இச் சாதனையை நடாத்துவதற்கு ஒத்துழைப்பு  வழங்கிய அதிபர், உடற்கல்வி ஆசிரியர், மற்றும் உதவி புரிந்த ஏனைய ஆசிரியர்கள், அனைவரையும் பாரட்டுவதோடு அனைவருக்கும் நன்றியையும் இதன்போது அவர் தெரிவித்தார். ,