மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வாய் பேசமுடியாத சிறுவன் ஒருவனை பேச வைப்பதற்கான சத்திர சிகிச்சை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வாய் பேசமுடியாத சிறுவன் ஒருவனை பேச வைப்பதற்கான சத்திர சிகிச்சையொன்று  (5.7.2017) புதன்கிழமை மேற் கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன..

ஏறாவூர் பணிக்கர் வீதியைச் சேர்ந்த ஒண்பது வயதுடைய முகம்மட் பர்வீஸ் என்ற சிறுவனுக்கே இந்த சத்திர சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் காது மூக்கு தொண்டை வைத்திய சத்திர சிகிச்சை நிபுனர் டாக்டர் எஸ்.ஜீவதாஸ் தலைமையில் கொழும்பிலிருந்து வருகை தந்த விஷேட வைத்தியர்கள் குழு இந்த சத்திர சிகிச்சையை மேற் கொண்டது.

பிறப்பிலிருந்தே வாய் பேசமுடியாத இந்த சிறுவனுக்கு பேச வைப்பதற்கான இந்த சத்திர சிகிச்சை ஆறரை மணித்தியாலயங்கள் இடம் பெற்றதுடன் வெற்றிகரமாக இந்த சத்திர சிகிச்சை மேற் கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.