மாகாணத்தில் சம்பியனாகியது கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணா

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ண மிசன் வித்தியாலய 16வயதுப் பிரிவு ஆண்கள் அணி உதைபந்தாட்டப் போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண மட்டத்தில் வியாழக்கிழமை(06) நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியிலே கொக்கட்டிச்சோலை பாடசாலை அணி சம்பியனாகியுள்ளது.
போட்டியின் இறுதிப்போட்டிக்கு உள்நுழைந்த கொக்கட்டிச்சோலை பாடசாலை அணி, மண்டூர் பாடசாலையை தண்டணை உதை மூலம் வெற்றி கொண்டு சம்பியனாக தேர்வாகியுள்ளது.
சம்பியனாகிய குறித்த அணி, தேசியமட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களை வரவேற்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(07) பாடசாலை மற்றும் பாடசாலை சமூகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதன் போது மாணவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, பேண்ட்வாத்தியத்துடன் ஊர்வலமாக கிராமத்தினைச்சுற்று வருகை தந்தனர்.