பெற்றோல்-டீசல் வாகனங்களுக்கு தடை

2040 ஆண்டுக்குள் பெற்றோல்-டீசல் வாகனங்களை தடை செய்ய பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டின் சுற்றாறடல் துறை அமைச்சர் நிக்கோலாஸ் ஹலோட் தெரிவிக்கையில் ,
2040-ம் ஆண்டிற்குள் பெட்ரோல்-டீசல் வாகனங்கள் விற்பனை செய்வதற்கு தடை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இலக்கை அடைவது கடினமானது என்றாலும் அதனை நடைமுறைபடுத்தியே தீருவோம் என்று தெரிவித்தார்.
பிரான்ஸ் அரசாங்கத்தின் இந்த அதிரடி தீர்மானத்தினால் வாகனத் தயாரிப்பாளர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இத்துறையைச் சேர்ந்த பலர் தொழில்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.