கொக்கட்டிச்சோலை பகுதியில் மாடுகள் கைப்பற்றப்பட்டன.

(படுவான் பாலகன்)  கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வைத்து நேற்று(05) மாலை சட்டவிரதோமான முறையில் கொண்டு சென்ற 11 மாடுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்றிலிருந்து மண்டூர் வழியாககொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி மாடுகள் மண்முனைப் பாலத்தடியில் வைத்தும், மாவடிமுன்மாரியிலிருந்து காத்தான்குடிக்கு எடுத்துச் செல்லும் போது இன்னொரு தொகுதி மாடுகள் மணற்பிட்டி சந்தியில் வைத்தும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள று.பு.சிசிரபண்டார தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இவ் தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த மாடுகளும், மாடுகள் கொண்டுசென்ற வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளன.