முதலைக்குடாவில் மாணிக்கவாசகர் குருபூசை தின நிகழ்வு

(படுவான் பாலகன்) முதலைக்குடா ஏகதந்தன் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் ஏற்பாட்டில், மாணிக்கவாசகர் சுவாமி குருபூசை தின பூசை வழிபாடுகளும், ஊர்வலமும் அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது முதலைக்குடா மகா வித்தியாலயத்திலிருந்து, மாணிக்கவாசகர் சுவாமி திருவுருவம் தாங்கியவாறு மாணவர்கள், முதலைக்குடா பாலையடிப் பிள்ளையார் ஆலயம் வரை ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலம் ஆலயத்தினை சென்றடைந்ததும், அங்கு விசேட பூசை ஆராதனைகள் இடம்பெற்றன. மேலும் மாணிக்கவாசகர்சுவாமி ஆற்றிய பணிகள், அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பிலும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.
இந்நிகழ்விற்கு ஏகதந்தன் இந்து இளைஞர் அபிவிருத்தி சங்கத்தினரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.