பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கு புதிய ஆண் உடற்கல்வி ஆசிரியர் நியமனம், கடமையாற்றிய பெண் ஆசிரியருக்கு இடமாற்றம்.

(பழுகாமம் நிருபர்)   கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் அவர்களின் முயற்சியினால் பெரிய கல்லாறு மத்திய கல்லூரிக்கு ஆண் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  இப் பாடசாலையின் விளையாட்டு துறை முன்னேற்றத்தினை கருத்திற்கொண்டு ஆண் உடற்கல்வி ஆசிரியர் ஒருவரை நியமித்து தருமாறு பாடசாலை அதிபர்,பாடசாலை கல்வி சமூகம், பிரதேச அரசியல்வாதிகள் உட்பட பலரும் பலதரப்பட்ட கோரிக்கைகளை பகிரங்கமாகவும், எழுத்து மூலமாகவும் முன்வைத்து வந்தனர். இதற்கிணங்கவே  இவ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி தவிசாளர் தெரிவித்தார்.
மலையகத்தில் கடமையாற்றிய ஆசிரியரை கடும் பிரயத்தனத்தின் மத்தியில் இங்கு கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
     பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் மாணவர் தொகைக்கு ஏற்ப ஒரு உடற்கல்வி ஆசிரியரையே இங்கு நியமிக்க முடியும் எனவும். இங்கு கடமையாற்றிய பெண் ஆசிரியரின் திறமையை கருத்திற் கொண்டு தங்களுக்கு நியமித்து தரும்படி பல பாடசாலை அதிபர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் இதற்கிணங்க அவர் வேறுபாடசாலைக்கு இடமாற்றப்படவுள்ளதாக வலயக்கல்வி பணிப்பாளர் தெரிவித்தார்