மாவடிமுன்மாரி வயலூர் முருகனுக்கு சங்காபிசேகம்

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவடிமுன்மாரி வயலூர் முருகன் திருக்கோயிலில் 108சங்குகளாலான சங்காபிசேகமும், பாலாபிசேகமும் இன்று(04) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
அடியார்கள் சிரசில் பாற்குடத்தினை ஏந்தி, ஆலயத்திற்கு வருகைதந்தனர். பின் அடியார்களினால் கொண்டுவரப்பட்ட பால், முருகன் மீது சொரியப்பட்டு, பாலாபிசேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 108சங்குகளால் சங்காபிசேமும் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இப்பூசை ஆராதனைகளில் நூற்றுக்கணக்கான பக்தர்களும் பங்கேற்றிருந்தனர்.