பிரிக்க நினைக்கின்ற பிரிவினவாதிகள் யாராக இருந்தாலும் எதிர்வரும் காலத்தில் தமிழ் இனத்தின் ஒற்றுமையை வளர்ச்சி பெற செய்வதற்கு பாடுபட வேண்டும்

பிரிக்க நினைக்கின்ற பிரிவினவாதிகள் யாராக இருந்தாலும் எதிர்வரும் காலத்தில் தமிழ் இனத்தின் ஒற்றுமையை வளர்ச்சி பெற செய்வதற்கு பாடுபட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளை தெரிவித்தார்..

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தை துப்பரவு செய்யும் பணி திங்கட்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!

எதிர்வரும் காலத்தில் இழந்த அனைத்தும் மீளப் பெறாவிட்டாலும் நம்மை உலக நாடுகள் பார்த்து உதவிக் கரம் நீண்டும் சூழ்நிலை உருவாக வேண்டும்.

தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் கருத்து வேறுபாடு உள்ளது என்பது உலகறிந்த உண்மை. ஆனாலும் போராட்டத்தில் மரணித்தவர்கள் நூற்றுக்கு எழுபத்தைந்து வீதமானவர்கள் தமிழ் இனத்தால் தமிழ் போராளிகளால் மாறி மாறி கொண்டு குவித்தார்கள் அவ்வேளையில் ஒற்றுமையைப் பற்றி மரணத்தை பற்றி சிந்திக்காதவர்கள் தற்போது நடக்கின்ற விக்னேஸ்வரன் ஐயாவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கருத்து வேறுபாட்டை பெரிதுபடுத்துகின்றார்கள்.

தாங்கள் எதிர்வரும் காலத்தில் நினைத்த காரியத்தை நிறைவேற்ற முடியும் என்ற அர்ப்ப ஆசையால் தமிழ் மக்களை கூறுபோட நினைக்கின்றவர்களுக்கு இன்று வாகரைப் பிரதேசத்தின் மாவீரர் துயிலும் இல்லத்தை துப்பரவு செய்வதை பார்த்தாவது பிரிக்க நினைக்கின்ற பிரிவினவாதிகள் யாராக இருந்தாலும் எதிர்வரும் காலத்தில் தமிழ் இனத்தின் ஒற்றுமையை வளர்ச்சி பெற செய்வதற்கு பாடுபட வேண்டும்.

அதனடிப்படையில் நாங்கள் விட்ட தவறுகளை மறந்து கடந்த கால கசப்புக்களையும் மறந்து, தமிழ் இனத்தின் எதிர்காலத்தை சிந்திப்பவர்களாகவும், தமிழ் இனத்தை எதிர்காலத்தில் எழுச்சிபெற செய்ய அனைவரும் விட்டுக் கொடுப்புடன் வாழ வேண்டும் என்றார்.