களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் முன்னாள் எருவில் கிராம பொதுமக்களினால் பாரிய ஆர்ப்பாட்டம்.

க.விஜயரெத்தினம்)
மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலத்தின் முன்னாள் இன்று
(3.7.2017) காலை 9.30 மணியளவில் எருவில் கிராமத்தை சேர்ந்த  பொதுமக்களால்
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.எருவில் கிராமத்தில் உள்ள
பொதுமக்கள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,இளைஞர்கள்,மகளீர்கள் ஒன்றிணைந்து
இந்த கவயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை பிரதேச செயலகத்தின் முன்பாக  நடாத்தினார்கள்..பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறி
எருவில் கிராமத்தில் கள்ளுத்தவறணை அமைப்பதற்கு அனுமதி கிடைத்துள்ள செய்தியை
பொதுமக்கள் அறிந்து கொண்டதையிட்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த
கவனயீர்ப்பு ஆட்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளதாக அறிய முடிந்துள்ளது.

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட பொதுமகள் பாதாதையை ஏந்தி ஆர்ப்பாட்டத்தை
நடாத்தினார்கள்.பொதுமக்கள் தமது கைகளில் “எமது கிராமத்திற்கு கள்ளுத்தவறணை
வேண்டாம்”, “போதையற்ற உலகை உருவாக்குவோம்” ,”சமூக சீர்கேட்டை இல்லாது ஒழித்து;
போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம்” , “வேண்டாம் மது…! நிராகரிக்கின்றோம் எமது
கிராமத்தில் உருவாகும் கள்ளுத்தவறணையை” எனும் வாசகம் அடங்கிய சுலோக அட்டையை
பொதுமக்கள் தாங்கிநின்றனர். இது சம்பந்தமாக களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் ஊடாக

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்,எம் சார்ல்ஸ் அவர்களுக்கும்
எருவில் கிராமத்தில் கள்ளுத்தவரணையை அமைக்க வேண்டாம் என்று பொதுமக்களினால் மகஜர் கையளிக்கப்பட்டது.