மாற்றுத்திறனாளிகளாலும் ஏற்றம் பெற முடியும் – ஞா.ஸ்ரீநேசன்

‘மாற்றுத்திறனாளிகளாலும் ஏற்றம் பெறமுடியும், அவர்களது ஆற்றல்களை வெளிக்கொணர வேண்டும்’ என்ற அடிப்படையில் நிகழ்வொன்று வந்தாறுமூலை அம்பலத்தடியில் (02.07.2017) நேற்று மாலை 06 மணியளவில் நடைபெற்றது.
ஜேர்மன் நாட்டின் டிஸேபிலிட்டி என்னும் நிறுவனம் இந்நிகழ்வினை ஒழுங்கமைத்திருந்தது. மாற்றுத்திறனாளிகளுடன், சாதாரண நிலையிலுள்ளவர்களும் கூட்டாக இணைந்து இந்நிகழ்வினை நடாத்தினர். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமிவிபுலானந்தா அழகியற்கற்கை மாணவர்கள், விரிவுரையாளர், மாற்றுத்திறனாளிகள் என்று பலரும் இணைந்து இந்த நடன உடற்பயிற்சி நிகழ்வினை மேற்கொண்டிருந்தனர்.
இந் நிகழ்வில் ஞா.ஸ்ரீநேசன் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர், கி;.துரைராஜசிங்கம் மாகாண விவசாய அமைச்சர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
இப்படியான நிகழ்வு மூலமாக மாற்றுத்திறனாளிகளாலும் முடியும் என்பதனையும், சகலரும் இணைந்து செயற்படவேண்டும். என்ற செய்தியும் வெளிப்படுவதாக ஸ்ரீநேசன் அவர்கள் குறிப்பிட்டார். ஜேர்மன் நாட்டு மாற்றுத்திறனாளியான டிகர்த்கொனிக் என்பவரும் இந்நிகழ்வின் பிரதானியாகச் செயற்பட்டார்.