ஒவ்வொரு தமிழர்களும் விழிப்புடன் செயற்பட்டு தமிழர்களின் இருப்பை தக்கவைத்து கொள்ளவேண்டும்”

(க.விஜயரெத்தினம்))

தமிழர்களின் பாரம்பரிய கலை, கலாச்சார, பண்பாட்டு, விழுமியங்களை முறையாக இணங்கண்டு அதற்கு புத்துயிர் ஊட்டி ,அதனை எம்மினத்திற்கு தெரியப்படுத்தியும்,முறையாக பாதுகாத்து  “தமிழர்களின் இருப்பை தக்கவைத்து கொள்ளவேண்டும்” என்று மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் தெரிவித்தார்..

மண்முனை வடக்கு கல்விக்கோட்டத்தின் கோட்டமட்ட கலைவிழாவில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மண்முனை கோட்டமட்ட கலைவிழா வெள்ளிக்கிழமை(30.6.2017) மட்/மகாஜன கல்லூரியின் கலையரங்கில் கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஏ.சுகுமாரன் தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன்  பேசுகையில் :- இன்று தமிழர்களின் பாரம்பரியம் முறையாக பேணிப்பாதுக்கப்படுகின்றதா …? என்ற சந்தேகம் எனக்கு தோன்றுகின்றது.தமிழர்களின் கலை,கலாச்சாரம்,பண்பாடு, ஒழுக்கம் போன்றன மருவிக்கொண்டு செல்கின்றது.ஒவ்வொரு தமிழர்களும் விழிப்புடன் செயற்பட்டு தமிழர்களின் கலை,கலாச்சாரம்,பண்பாட்டை அறிந்துகொண்டு அவற்றை கட்டி பாதுகாக்க வேண்டும்.அத்துடன் எங்களின் அடுத்த சந்ததிக்கு கையளித்து தமிழர்களின் இருப்பை தக்கவைத்து கொள்ளவேண்டும்.இல்லையென்றால் தமிழர்களின் அடையாளம் இல்லாமல்போய் தமிழர்கள் தமிழ்மொழியையும்,கலைகளையும் பிற்காலத்தில் தேடிப்பெறுவதில் கஸ்டப்படுவார்கள்.

நான் பத்திரிகையில் அண்மையில் படித்த விடயத்தை சொல்லவிரும்புகின்றேன்.இலங்கையில் தமிழர்கள் வாழ்வது போன்று இந்தோனோசியாவிலும் தமிழர்கள் வாழ்கின்றார்கள்.தமிழ்மொழியை நாம் பின்பற்றுவதுபோல் அங்குள்ள எம் தமிழர்களும் தாய்மொழி தமிழை பின்பற்றி வருகின்றார்கள்.

இந்தனோசியாவில் 170 கலைகள் காணப்படுகின்றது.அங்கு எல்லா இடங்களிலும் தமிழ்மொழி பின்பற்றுவதில்லை.ஆனால் அந்நாட்டிலே 170 கலைநிகழ்வுகள் இன்றும் சிறப்பாக பாதுகாக்கப்பட்டு அழியாமல் உள்ளது.அங்குள்ளவர்கள் பாதுகாப்பது போன்று இலங்கை திருநாட்டின் தமிழர்கள் தங்களின் கலை,கலாச்சார,பண்பாட்டை கட்டுக்கோப்புடன் ஏன் பாதுகாக்க முடியாது.எனவே ஒவ்வொரு தமிழர்களும் விழிப்புடனும்,வினைத்திறனுடனும் செயற்பட்டு தமிழர்களின் கலைகளை பாதுகாப்பது இக்காலத்தின் தேவையாகும்.இல்லாவிட்டால் தமிழர்களின் இருப்பு அழிந்து போகும் என்பது உண்மையாகும்.

இன்றைய கோட்டமட்ட கலைநிகழ்வுகளை பார்க்கும்போது எல்லோரும் மெச்சத் தக்கவகையில் நிகழ்வுகள் முறையாக இருக்கின்றது. தமிழர்களின் அடையாளங்கள்,இன்றைய தேவைகள்,தமிழ்மொழியின் முக்கியம் என்பனவற்றை உள்ளடக்கி நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளது.இதனை ஏற்பாடு செய்த மண்முனை வடக்கு கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஏ.சுகுமாரன், அவர் தலைமையிலான கல்வி அபிவிருத்தி சபை,அதிபர் குழாம்,ஆசிரியர் குழாம் போன்றவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்களையும்,நன்றிகளையும்,நான் மனதார தெரிவித்துக்கொள்கின்றேன்.இவர்கள் எம் சமூகத்தின் தேவை உணர்ந்து செயற்படுகின்றார்கள் எனத் தெரிவித்தார்.