முனைப்பினால் முதியவர்களுக்கு வாழ்வாதார மருத்துவ உதவிகள்

முனைப்பு நிறுவனத்தினால் துறைநீலாவணை,கரவெட்டிப்பிரதேசங்களைச் சேர்ந்த குடும்பத்தை பாராமரிக்கும் இரண்டு முதியவர்களுக்கு வாழ்வாதார, மருத்துவஉதவிகள் அண்மையில் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
துறைநீலாவணைக்கிராமத்தில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு தனது 71வயதுடைய தாயையையும் விசேட உதவியுடைய இரு சகோதரங்களையும் பாராமரித்து வந்த இளைஞன் அண்மையில் முதலைக்கடிக்கு உள்ளாகி மரணமடைந்த சம்பவத்தையடுத்து குடும்பம் எதுவிதவருமானமுமின்றி நிர்க்கதி நிலையில் காணப்பட்டது..
இதனையறிந்த துறைநீலாவணைக்கிராம இளைஞர்களால் குடும்பத்துக்கு தலைமைதாங்கும் தாயின் பெயரில்  வங்கிக்கணக்கை ஆரம்பித்து நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இதனையறிந்த முனைப்பு நிறுவனத்தினர் நிதியத்தில் வைப்பிலிடுவதற்காக குடும்பத்துக்கு கிராம  இளைஞர்கள் முன்னிலையில் ஒரு தொகைநிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிதியினை முனைப்பின் சார்பில் அதன் தலைவர் மா.சசிகுமார், செயலாளர் இ.குகநாதன் ஆகியோர் நேரில் சென்று கையளித்தனர்.
இதேவேளை மட்டக்களப்பு கரவெட்டிப்பிரதேசத்தில் வறுமைக்கோட்டின்கீழ்வாழும் பெண் ஒருவருக்கு கண்சத்திரசிகிச்சைக்காக ஒரு தொகைப்பணமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இப்பணத்தினை தலைவர் மா.சசிகுமார், பொருளாளர் அ.தயானந்தரவி  செயலாளர் இ.குகநாதன் ஆகியோர் நேரடியாக வீட்டுக்கு சென்று வழங்கி வைத்தனர்.