கல்குடா வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் தலைமையில்மாவட்ட மட்ட ஆங்கில தினப்போட்டிகள்

மாவட்ட மட்ட ஆங்கில தினப்போட்டிகள் இன்று(01) கல்குடா வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி தலைமையில் நடைபெற்றது..

செங்கலடி மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வுகளில்; கல்குடா கல்விவலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.எஸ்.ரவிராஜ், ஆங்கிலப் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் கே.பாலச்சந்திரன், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆங்கிலப் பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகர்கள் , ஆங்கில பாட ஆசிரியர்கள், 05 வலயங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.