கிரான் மஹா காளி அம்பாள் ஆலயத்தின் மஹா கும்பாவிஷேகம்

கிழக்கிழங்கையில் புகழ்பெற்ற காளி அம்பாள் ஆலயங்களுள் மட்டக்களப்பு கிரான் அருள்மிகு மஹா காளி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேக இன்று காலை விநாயகர் வழிபாட்டுடன் இடம்பெற்றது.
மஹா கும்பாபிஷேகத்தின் பிரதிஸ்டா பிரதம சிவாச்சாரியார் கிரியாக்கிரமஜோதி ப்ரம்மஸ்ரீ இலக்ஷ்மீகாந்த ஜெகதீசக்குருக்கள் தலைமையில் ஆலயத்தின் கும்பாபிஷேகத்திற்குரிய அனைத்து கிரிகைகளும் இடம்பெற்றது..

மந்திர பாராயணம் ஒலிக்க மஹா காளி அம்பாளினுடைய தேவஸ்தானத்தில் வைக்கப்பட்ட கோபுர கலசத்துக்கு பிரதான கும்பம் மற்றும் பரிவார கும்பங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கலசத்துக்கு சுபவேளையில் சிவச்சாரியர்களினால் கும்பாவிஷேகம் இடம்பெற்றது.

கிரான் பகுதியில் மிகவும் சிறப்பானதொரு ஆலயமாக மஹா காளி அம்பாள் ஆலயம் அமைந்துள்ளதுடன், கும்பாவிஷேக காலங்களில் பக்தர்களின் நலன்கருதி ஆலயத்திக் அரங்காவலர் சபையினரால் மூன்றுவேளை அன்னதானம் மற்றும் அனைத்து ஏற்பாடுகளையும் ஏற்படுத்தியுள்ளனர்.

இன்றைய கும்பாவிஷேக விசேட பூசையினைக் காண பெருமளவான பக்தர்கள் வருதைதந்திருந்ததுடன் நடைபெற்ற யாக கிரிகைகளிலும் கலந்துகொண்டு வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.