மட்டக்களப்பு மிகவும் அழகான சூழலைக்கொண்ட மாவட்டமாக விருந்தபோதும் பல அழகான இடங்கள் கவனிப்பாரற்ற நிலமையில் உள்ளன

உலகத்தில் இன்று முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாக சூழல் பிரச்சனை உள்ளன. இலங்கையிலும் அண்மையில் இதன்தாக்கம் அதிகளவில் உணரப்பட்டுள்ளன.  அதிக அழிவுகளை ஏற்படுத்தின.

. மட்டக்களப்பு  மாவட்டத்தைப்பொறுத்தவரை குறிப்பாக சட்டவிரோத மண்ணகழ்வு போன்ற பல நடவடிக்கைள் எதிர்காலத்தில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளன.

இது போன்ற சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல  பிரச்சனைகளுக்கு   பாதுகாப்பு நடவடிக்கைளை அரச அதிகாரிகள் அமைப்புக்கள், உள்ளுராட்சி மன்றங்கள் முன்னெடுக்கின்றன ,அவர்கள் தான் பொறுப்பானவர்கள் இதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை என பொதுமக்கள் இருந்து விடக்கூடாது.

என மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஆ.நகுலேஸ்வரன் தெரிவித்தார்.இன்று(30.06.2017) 10மணியளவில்  இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சூழல்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு அகத்தின் இணைப்பாளர் பொ.சற்சிவானந்தம் தலமையில் மட்டக்களப்பு தேவநாயகம் அரங்கில் நடைபெற்றது.

இங்கு கிழக்கு பல்கலைக்கழ சிரேஸ்ர புவியல்துறை விரிவுரையாளர் இ.கிருபைராஜா. மத்தியசுற்றாடல் அதிகார சபையின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் சி.உதயராஜன், அரசசார இணைய தலைவர் ச.சிவலோகநாதன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்

 மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் வலைய அமைப்பின் பிரதிநிதிகளுகென நடாத்தப்பட்ட இச்செயலமர்வில் மேலும் பேசிய  உதவி மாவட்டச்செயலாளர் குறிப்பிடுகையில்,இன்றைய இந்நிகழ்விற்கு அரச அதிபர் வருகைதர இருந்தார் திடிரென ஏற்பட்ட அவசிய நிழ்வுகருதி அவர் செல்ல வேண்டியேற்பட்டதனால் என்னை கலந்தொள்ள அவர் பணிதிருந்தார்.

இலங்கையில் அண்மையில் பாரிய அனர்த்தம் தென்பகுதியில் இடம்பெற்று பல அழிவுகளை ஏற்படுத்தியது. குப்பைமேடு சரிந்து விழுந்து அதனாலும் பாரிய உயிர்ச்சேதங்கள்  ஏற்பட்டன.

இதுபோன்ற அனரத்தங்களில் இருந்து எமது சூழலை பாதுாக்கவேண்டிய நிலமை உள்ளன. இவ்வாறான காலகட்டத்தில் இச்செயலமர்வானது மிகவும் முக்கியம் வாய்ந்தது.

நமது மாவட்டம் மிகவும் அழகான சூழலைக்கொண்ட மாவட்டமாக விருந்தபோதும் பல அழகான இடங்கள் கவனிப்பாரற்ற நிலமையில் உள்ளன.

எமது மாவட்டத்தலும் பல பிரச்சனைகள் உள்ளன. குறிப்பாக சட்டவிரோத மண்ணகழ்வு என்பது போன்ற  நடவடிக்கைளால் எமது சூழலுக்கு அச்சுறுத்தல் நிலமைகள் காணப்படுகின்றன.

இவற்றை தடுக்க பொதுமக்களாகிய நீங்களும் வழிப்புடன் செயற்பட வேண்டும்

 இவை அரச அதிகாரிகள்,உள்ளுாராட்சி மன்றங்கள்  போன்ற அமைப்புக்களின் பணி இதில் நாம் கவனம் செலுத்த வேண்டியதில்லை என நீங்கள் இருந்துவிடக்கூடாது

மிகவும் விழிப்புடன் இருந்து எமது சூழலை பாதுகாக்க வேண்டும் அதற்கான அறிவுகளைப்பெற்று கிராம மட்டத்தில் உள்ள வர்களுக்கும் தெளிவு படுத்தவேண்டும்  எனவும் சுட்டிக்காட்டினார்.

இங்குதலமையுரையாற்றி அகத்தின் இணைப்பாளர் பா.சற்சிவானந்தம்.குறிப்பிடுகையில். கிழக்கு மாகணம் தற்காலத்தில் சட்டவிரோத மண்ணகழ்வு நோயால் வேகமாக பீடிக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் மாகாண சபையிலும் இவ்விடயம் ஆராயப்பட்டு கிழக்கு மாகாண மட்டத்தில் இதுதொடர்பான ஆய்வுக்கூட்டம் நடாத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்ட்டிருக்கிறது.

இந்நிலையில் அபிவிருத்தி, என்ற போர்வையிலும் வேறு பல காரணங்களாலும் கிழக்கின் சூழலுக்கு அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளன.

இயற்கையும் மாற்றத்தை நாளுக்கு நாள் காட்டிவரும் நிலயைில் கிழக்கின் மானாவரி நெற்செய்கையும் மழையின்மையால் அண்மையில் கைவிடப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கையேந்தும் நிலமையை அடைந்துள்ளன.

இவ்வாறு பல்வேறு வழிகளிலும் பாதிப்புக்கள் வந்தவண்ணமுள்ளன. இந்நிலையில் அகம் கடந்த வாரம் அம்பாறை  நாவிதன் வெளி பிரதேச செயலாளர்பிரிவிலும்,திருகோணமலை  மூதுார் பிரதேச செயலாளர் பிரிவிலும் இத்தகைய சூழல் ஆய்வரங்குகளை அகம்  மேற்கொள்ள உதவின

. அதன் ஒரு அங்கமாக  மட்டக்களப்ப மாவட்டத்தில் இன்று முன்னெடுக்கப்படுகின்றன. திருகோணமலை மாவட்டத்தின் மூதுார் இரால்குழி கிராமம் மிகவும் இயற்கை எழில்கொண்ட பகுதி இன்று அது மண்ணகழ்வாலும் கங்கையரிப்பாலும்அழிவை சந்தித்த வண்ணமுள்ளன.

இதேபோன்ற நிலமைகள் சூழல் பிரச்சனைகள் இம்மாவட்டத்திலும் எழ அனுமதிக்க கூடாது. இவ்விடயத்தில் பொது மக்கள் அமைப்புக்கள் அதிகாரிகள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டியுள்ளன.எனவும் குறிப்பிட்டார்.